தஞ்சாவூர், மே 1 - பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல் கண்ட அரசுப் பள்ளி கட்டிட வகுப்பறையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுமதிக்க அச்சம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி முதன்மைச் சாலையில், நூற்றாண்டை நெருங்கும், ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த ஆயிரக் கணக்கானோர் பல்வேறு அரசுப் பணி களிலும், அரசியல் உயர் பதவிகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்றும், பணி யாற்றியும் வருகின்றனர். பேராவூரணி நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த தொடக்கப் பள்ளி யில் இந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஏழை - நடுத்தர மக்கள் தங்களது குழந்தை களை படிக்க அனுப்புகின்றனர். தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். இதே வளா கத்தில் மாற்றுத்திறனாளிகள் குழந்தை களுக்கான சிறப்பு பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டுமென பெற்றோர் ஆசி ரியர் கழக கோரிக்கையின்படி, கடந்த 2018-19 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு இரண்டு வகுப்பறைகள் கட்ட பணி கள் துவங்கப்பட்டன. கொரோனா கார ணமாக இடையில் பணிகள் நடைபெறா மல் இருந்து, கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு, கட்டிட வேலை நிறைவ டைந்து, இன்னும் திறப்பு விழா காணப் படாமல் உள்ளது. இந்நிலையில் பள்ளிக் கட்டிடத்தின் வகுப்பறையின் நடுப்பக்க தடுப்புச்சுவ ரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நடுப்பக்க தடுப்புச்சுவர் பலமில்லாமல் கட்டப்பட் டுள்ளதால் விழுந்து விடுமோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். எனவே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் வகுப்பறை கட்டிடம், நடுப்பக்க தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் ஆசிரி யர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.