districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது!ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், டிச.22 -  தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில், சனிக்கிழமை ஓய்வூதியர் தின கருத்த ரங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு ஆகியவற்றின் சார்பில் நடை பெற்றது.  

கருத்தரங்கிற்கு, ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்  எஸ்.பால்ராஜ் வரவேற்றார். ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலிய மூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.மணிவண்ணன், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பு மாநில பொதுச்  செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் எஸ்.கோவிந்தராஜ் நன்றி கூறினார். “டாக்டர் அம்பேத்கரை அவ மதித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்தும், அனைவருக்கும் முறைப் படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் அமலாக் கப்பட வேண்டும். 70 வயதில் 10 விழுக் காடு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும்.  கமுட்டேஷன் பிடித்தம் புத்தாண்டுக் குள் முடிக்கப்பட வேண்டும்.  

சத்துணவு அங்கன்வாடி ஊழி யர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க  வேண்டும். அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்ற உத்தர வின்படி டி.ஏ நிலுவை உள்ளிட்ட சலுகை களை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்க கூடாது” என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.