districts

img

மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு தலைமை ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர், நவ.7-  மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பரிசுத் திட்டத்தை அறி வித்துள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்  நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி யில் சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்று களை வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பு அவசியம் குறித்து பேசினார்.  அப்போது பள்ளித் தலைமையா சிரியை மகேஸ்வரி, வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக வளர்த்து ஓராண்டு முடிவில், மரத்தை நன்றாக வளர்த்துள்ள மாணவர்களில் ஒருவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண் டாம் பரிசாக தலா இரண்டு பேருக்கு 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா மூன்று மாணவர்களுக்கு ஆயிரம்  ரூபாயும் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல ரும் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், தஞ்சா வூர் மாவட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு விருட்சம்’ என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி  கடந்தாண்டு துவங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை 93 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் இறு திக்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மரக்கன்றுகள் வளர்ப்பில் பள்ளி மாண வர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.