சிவகங்கை,பிப்.18- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கொடையாளர் செல்வம் பங்களிப்போடு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி வகுப் பறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலை வர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார். கொடையாளர் செல்வத்தை பாராட்டினார். இளையான்குடி சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் பாஸ்கரன் மகன் செந்தில் சார்பில் ஊக்கத் தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மாணவர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இவ் விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கொடையாளர் செல்வம், உதவி திட்ட ஒருங்கிணைந்த அலுவலர் பீட்டர்லமாயூ,சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் சுப்பிரமணியன், சாத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரளாராஜ்குமார்,சீவலாதி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் ,பூலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் மலையரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.