திருவள்ளூர், செப். 9- கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100விழுக்காடு இலக்கினை எட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் உட்பட 37 தலைவர்களை வியாழனன்று (செப்-9) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார். திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் ஞாயி றன்று (செப்.12) மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி முகாம் நடத்த உள்ளது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட நிர்வா கத்தின் சுகாதாரத்துறையினர், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி துறையினர், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒரு லட்சம் எண்ணிக்கையி லான தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாமில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தி இலக்கினை எட்டும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் கள், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பி னர்கள் உள்ளிட்டவர்களை கவுரவிக்கும் வித மாக நற்சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாராட்டு விழா வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், சுகாதார துறை மாவட்ட துணை இயக்குநர் ஜவஹர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.