தஞ்சாவூர், பிப்.18 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக் னிக் கல்லூரியில், விவேகா னந்தர் பிறந்த தினமான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதுக்குட்பட் டோருக்கான இந்த கால்பந்து போட்டியில் பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சா வூர், அதிராம்பட்டினம் பகுதி களைச் சேர்ந்த 14 அணி யினர் கலந்து கொண்டனர். சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் நடுவர்களாக செல்லப்பாண்டியன், முத்து மாலை, ராஜகோபால், அப்துல்லா ஆகியோர் செயல்பட்டனர். பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் போட்டி யைத் தொடங்கி வைத்தார். போட்டியில் ஒய்.பி.ஆர் ஒரத்தநாடு, ஒய்.பி.ஆர் தஞ்சாவூர், செல்லையா புட்பால் கிளப் ஆம்பலாப் பட்டு, பிக் டெம்பிள் பள்ளி ஒரத்தநாடு ஆகிய அணியி னர் முறையே முதல், இரண் டாம், மூன்றாம் மற்றும் நான்காமிடத்தை பிடித்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி யின் கணினி மேலாளர் ஜி. பொன்னுசாமி வரவேற்றார். நாட்டுச்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஆர்.அகிலா வெற்றி பெற்ற அணி யினருக்கு பரிசுகளை வழங்கி னார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெ.ராஜமாணிக் கம் நன்றி கூறினார்.