தஞ்சாவூர், மார்ச் 19 - மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ் என்ற எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டை முன்னிட்டு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான, பள்ளி மாணவர்களுக் கான வாலிபால் போட்டி பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 10 அணியினர் கலந்து கொண்டனர். நாட்டுச்சாலை அரசினர் மேல் நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை ஆதிதிரா விடர் நல மேல்நிலைப்பள்ளி, சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, செண்டங் காடு அருணோதய மேல்நிலைப்பள்ளி ஆகியன முறையே முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின. இந்த போட்டிக்கு நடுவர்களாக அத்தி வெட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கே.இராமமூர்த்தி மற்றும் பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.விஜயகுமார் ஆகி யோர் பணியாற்றினர். நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் ஏனாதி உயர்நிலைப் பள்ளி தலைமை யாசிரியர் பழனிவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கி னார்.