districts

img

பட்டுக்கோட்டை சிபிஎம் கொடியேற்று நிகழ்ச்சி எம்.சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்பு

தஞ்சாவூர், மார்ச் 7 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கிளைச் செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். தமிழ்செல்வன் வரவேற்றார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், கட்சி மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை கொடியேற்றி வைத்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எஸ்.தமிழ்ச்செல்வி, பி.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தியாகி மலேயா கணபதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.