districts

தீக்கதிர் செய்தி எதிரொலி பட்டுக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வாகனம் நிறுத்த, ஓய்வெடுக்க இடம் ஒதுக்கீடு

தஞ்சாவூர், ஏப்.24 - தீக்கதிர் செய்தி எதிரொலி யாக பட்டுக்கோட்டையில், 108 ஆம்புலன்ஸ் வாக னத்தை நிறுத்தவும், ஆம்பு லன்சில் பணியாற்றும் ஊழி யர்கள் ஓய்வு எடுக்கவும், நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.  உரிய நடவடிக்கை எடுத்த பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் பிரபா கரன், பட்டுக்கோட்டை நக ராட்சி ஆணையர் சுப்பையா  ஆகியோருக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டையில் அவசர சேவைக்காக தமிழக  அரசால் இரண்டு 108 ஆம்பு லன்ஸ் வாகனம் இயக்கப் பட்டு வருகிறது. இதில் ஒரு  வாகனம் உள்ளூர் சேவைக் கும், ஒரு வாகனம் தஞ்சை  சென்று வரவும் பயன்ப டுத்தப்படு வருகிறது. இந்த இரண்டு வாகனத்திலும் பத்துக்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணியாற்றி வரு கின்றனர்.  108 ஆம்புலன்ஸ் வாக னத்தை நிறுத்த இடமில்லா மல் காவல் நிலையம், சாலை  ஓரங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. மேலும், பணியா ளர்கள் ஓய்வெடுக்கவும், கழிப்பறை செல்லவும் வசதி  இல்லாமல் இருந்தது. மேலும்,  சமுதாயக் கூடத்தில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது.  இதுகுறித்து கடந்த ஏப். 22 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) தீக்கதிர் நாளிதழில்  விரிவான செய்தி வெளியாகி யிருந்தது. இதையடுத்து, இதுகுறித்து உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக வரு வாய் கோட்டாட்சியர் பிரபா கரன் தெரிவித்திருந்த நிலை யில், பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் உத்தர வின்படி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா,“ நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில், 108 ஆம்புலன்சை மீண்டும் நிறுத்திக் கொள்ள வும், அங்குள்ள அறையை ஓய்வெடுக்கவும், கழிப்பறை யையும் பயன்படுத்திக் கொள் ளலாம்” எனவும் அனுமதி அளித்துள்ளார்.  

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்த சாமி கூறுகையில், “108 தொழிலாளர்களின் அவல  நிலை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  செய்தியாக தகவல் தரப்பட் டிருந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உரிய நடவ டிக்கை எடுத்து சமுதாயக் கூடத்தை ஒதுக்கி தந்துள் ளார். உரிய நடவடிக்கை எடுத்த பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர், நக ராட்சி ஆணையர் ஆகியோ ருக்கு, 108 ஆம்புலன்ஸ் பணி யாளர்கள் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்”  என்றார். இதனிடையே நம்மிடம் பேசிய வருவாய் கோட்டாட் சியர் பிரபாகரன், 108 ஆம்பு லன்ஸ் பணியாளர்களுக்கு நிரந்தர ஏற்பாடாக வாகனம் நிறுத்தவும், ஓய்வறை வசதி யும் செய்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.