districts

தஞ்சையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு

தஞ்சாவூர், மார்ச் 1 - வேளாண் உற்பத்தி யினை பெருக்கி, விவசாயப்  பெருமக்களின் வருமானத் தினை உயர்த்துவதற்கு தமிழ் நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  நடப்பு 2022 ஆம் ஆண்டு  மீண்டும் தென்னை விவசா யிகளின் நலனைப் பாதுகாக் கும் நோக்கத்தில், ஒன்றிய  அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையில், அர வைக் கொப்பரை கொள்முதல்  செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், தஞ்சா வூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள்  மூலமாக அரவைக் கொப்பரை  4,200 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு திட்டமிட்டப் பட்டுள்ளது.  அரவைக் கொப்பரைக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம்,  நன்கு சுத்தம் செய்து ஈரப்ப தம் 6 சதவீதம் இருக்குமாறு, நன்கு உலர வைத்து விவசா யிகள் கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு நன்கு உலர வைத்து தரமுள்ள அரவைக்  கொப்பரை கிலோ ஒன்றிற்கு  ரூ.105.90 வீதம் கொள்முதல்  செய்யப்படும். கொப்பரைக் கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக வரவு வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு மாதம் முதல் ஜூலை 2022 வரை அரவைக் கொப் பரை கொள்முதல் செய்யப்ப டும்.  இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசா யிகள், நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங் களுடன், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு  செய்து தங்களது கொப்பரை யினை விற்பனை செய்து பய னடையலாம். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை  கிடைக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை தென்னை சாகுபடி செய்யும் அனைத்து  விவசாயிகளும் பயன்ப டுத்திக் கொள்ளுமாறு தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.