தஞ்சாவூர், டிச.24 - நடைபெற்று முடிந்த நாடாளு மன்ற கூட்டத்தொடரில் விவசாயி களின் விளைபொருட்களை சந்தைப் படுத்துதல் தொடர்பாக தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்ட வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகும். இந்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
வேளாண் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும். நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விவ சாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகள் சங்கத் தலைவர் ஜகுத்சிங் தலேவால் 20 நாட்களுக்கு மேலாக உண்ணா விரதம் மேற்கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விவசாயி கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செய லாளர் முத்து உத்திராபதி, திமுக விவசாய அணி மாவட்டச் செயலா ளர் பி.கோவிந்தராஜ், நலிவுற்ற விவ சாயிகள் சங்க தலைவர் இப்ராகிம், காவிரி உரிமை மீட்புக் குழு ரமேஷ் மற்றும் விவசாயிகள் சங்கத் தலை வர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஐக்கிய விவசாயி கள் முன்னணி, விவசாயத் தொழிலா ளர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்க ளின் மாவட்டக் குழு சார்பாக நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஐக்கிய விவசா யிகள் முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கே.ஆர்.ஜோசப் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் கே.முருகை யன், விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆறு.பிர காஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தலைவர் எ.கே.என்.அனிபா, ஏஐடியுசி மாவட்டத் தலை வர் ஜெ.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாய முன்னணியின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் த.செல்வராசு தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் மு.மாத வன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் க.சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
கரூர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் ஒன்றியக் குழு சார்பில் கிருஷ்ண ராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே. கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராய புரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்ம லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சரவணன் ஆகியோர் உரை யாற்றினர். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எ.நாகராஜன் நன்றி கூறினார்.