கும்பகோணம், செப்.14 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சாரத் துறையில் பராமரிப்பு வேலை செய்வதற்காகவும், தெருக்களில் மின் கம்பங்களில் மரக்கிளைகள் படர்ந்து பாதிப்பு ஏற்படாமல் மரக்கிளைகளை அகற்றுவதற் காகவும், மின் ஊழியர்கள் ஒவ்வொரு வார மும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் முழுவதும் (காலை முதல் மாலை வரை) மின் நிறுத்தம் செய்து பராமரிப்பு பணிகளை செய்து வரு கின்றனர். இதனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்க ளுக்குப் பிறகு வார தொடக்கத்தின் 2-வது நாளான செவ்வாய்க் கிழமை மின்சாரம் நிறுத் தப்படுவதால், வங்கி மற்றும் அன்றாட அலுவலக வேலைகள், மிகவும் பாதிக்கப்படு கின்றன. இதனைத் மின்சாரத் துறை கருத் தில் கொண்டு செவ்வாய்க்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்வதை தவிர்த்து, மாதத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மின் நிறுத்தம் செய்து பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்று மாதம்தோ றும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மின் நிறுத் தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாச்சி யார்கோவில் வர்த்தக சங்கம் மற்றும் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். பொது மக்கள் கோரிக்கையை மின்சாரத் துறை நிறை வேற்றுமா?