districts

தீபாவளிக்கு முன்பே கூட்டுறவுத் துறையின் ஆன்-லைனில் உணவுப் பொருட்கள் விற்பனை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கும்பகோணம், செப்.23 - தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதி யில் அமைந்துள்ள சந்திரசேகராபுரம் கூட்டு றவு மொத்த விற்பனை அங்காடியை ஆய்வு  செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தனியார் துறைக்கு முன்னதாகவே 1970 முதல் கும்பகோணம் மற்றும் சுற்றுலா கிரா மங்களில் இந்த சந்திரசேகராபுரம் மொத்த  விற்பனை அங்காடி செயல்பட்டு வரு கிறது. தனியார் நிறுவனத்தைவிட தரமான  பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப் படுகிறது. அதேபோன்று மருந்து-மாத்திரை கள் 20 விழுக்காடு குறைந்த விலையில் கிடைக்கிறது. ஒரு சில மருந்துகள் மிகமிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. மேலும் இந்த சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என பாராட்டினார்.  மேலும் சுயஉதவி குழுக்கள் சுவாமி மலையில் செய்யப்படும் சிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு, விற்பனை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.  தீபாவளிக்கு முன்பாகவே கூட்டுறவுத் துறை யின் மூலம் ஆன்-லைனில் உணவுப் பொருட் கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தொடக்கப்படும். வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டத்தை யும் தொடங்க உள்ளோம். கடந்த ஆண்டு ரூ.10,892 கோடி அள விற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.14,84,052 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதைவிட கூடுதலாக வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.