districts

img

தஞ்சாவூர்: லாரி மோதி 3 பேர் பலி  

தஞ்சாவூர் அருகே லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச்சாலையில் கடகடப்பை பகுதியில் இன்று அதிகாலையில் 3 பேர் சாலை நடுத்திட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.

இந்த விபத்தில் வல்லம் அருகே நாட்டாணியைச் சேர்ந்த பிரசாத்(41), மாரியம்மன் கோவில் அருகே மருங்கையைச் சேர்ந்த சந்திரசேகர்(32), வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதி அவளிவநல்லூரைச் சேர்ந்த சுதாகர்(27) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.