திருச்சிராப்பள்ளி, மே 8 - திருச்சி மாவட்டம் கல்லணை அருகே பனைய புரத்தில் டாட்டா ஏசி வாக னத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை யில், கும்பகோணம் பகுதி யில் இருந்து விராலிமலை அருகே செல்லம்பட்டி பகுதி யில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவ தற்காக திருச்சி கல்லணை பனையபுரம் அருகே 8 பேர் டாட்டா ஏசி வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி லாரி ஓட்டுநர் மற்றும் டாட்டா ஏசி வாகனத்தில் வந்தவர்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுப்பி வைத்த னர். இந்த விபத்தில் கும்பகோ ணம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்த மூன்று பெண்களின் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக் காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான லாரி சாலையின் அருகே 30 அடி காட்டு வாய்க்காலில் விழுந்து நொறுங்கியது. போலீசார் இறந்த பெண்களின் பெயர் மற்றும் முகவரி குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.