districts

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளை அனுமதிக்க கூடாது! வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

தஞ்சாவூர், டிச.22 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர்ப்பகுதி மதுக்கடை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன், நிர்வாகி த.பழனிவேல் ஆகியோர் பேராவூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

 அம்மனுவில், “பேராவூரணி நகர் பகுதியில்  கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சேது சாலை, ஆவணம் சாலை, அறந்தாங்கி சாலை  போன்ற மூன்று முதன்மையான சாலைகளி லும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன.  இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வணிகர்களும் பெரும் அவதிக்கு உள்ளா னார்கள். மேலும் இந்த மதுக்கடைகளினால் திருட்டு,  கொலை, கொள்ளை, அடிதடி போன்ற சட்டம்  ஒழுங்கு சிக்கல்களும் இருந்து வந்தன.

இத னால், பேராவூரணியில் உள்ள பல்வேறு கட்சி களின் பொறுப்பாளர்கள், இயக்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பெருந் திரள் மக்களைத் திரட்டி, “பேராவூரணி நகர் பகுதி மதுக்கடை எதிர்ப்புப் போராட்டக் குழு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கினோம்.   இந்தக் கூட்டமைப்பு சார்பில் நகர் பகுதி யில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த நடத்தப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மதுவுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு  செய்தனர்.

இந்தப் போராட்டங்களே பேராவூர ணியின் வரலாற்றை திருத்தி எழுதியது.  மதுக்கடை இல்லாத நகராக மாற்றியது. பட்டுக்கோட்டைச் சாலை, சார் பதிவாளர் அலுவலகம் அருகில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆவ ணம் சாலையில் டாஸ்மாக் மதுக் கடையை கொண்டு வருவதற்கு அடுத்தடுத்து முயற்சி செய்தார்கள்.

அத்தனை ஏற்பாடுகளும் போராட்டக் குழுவின் முயற்சியாலும், ஆயிரக் கணக்கான பொதுமக்களின் வலிமையான போராட்டங்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டிலேயே மதுக்கடையே இல்லாத நகர்ப் பகுதியாக பேராவூரணி பெருமையோடு திகழ்ந்து வருகிறது. மனமகிழ் மன்றம் தற்பொழுது மீண்டும் மாற்று வடிவில் மதுக்கடையை பேராவூரணி நகர் பகுதிக்குள்  நிறுவிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை அறிகிறோம். ஃபாரின் லிக்கர் (F.L-2) என்ற பெயரில் பார் வசதியுடன் உயர்தரத் தனியார் மதுக் கடையை மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தொடங்குவதற்கு, பணம் படைத்த ஒரு சிலர்  முயற்சிப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் பரவு கிறது. ஏதேனும் ஒரு வடிவில் பேராவூரணி யின் பெருமையை சிதைக்கும் வகையில் அமைக்கப்படும் மதுக்கடைகளை ஒரு போதும்  அனுமதிக்க கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுகோள் இப்பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெரும் செல்வந்தர் கள், மக்களின் உயிரைக் குடிக்கும், நடுத்தர  மற்றும் உயர் வருமானம் கொண்ட மக்களை  குடிகாரர்களாக மாற்றும் உயர்தர மதுக் கடை கள் தொடங்கும் முயற்சிகளைக் கைவிட்டு, உற்பத்தி சார்ந்த பெரும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் தொடங்கினால் பல குடும்பங்கள் அதனால் வாழ்வு பெறும். நம் பகுதியும் வளர்ச்சி பெறும் என்று மதுக்கடைகளை நிறுவ முயற்சி மேற்கொள்ளும் செல்வந்தர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.