தஞ்சாவூர், அக்.5 - கழனிவாசல் ஊராட்சியில், நிர்வாக நிதிப் பரிவர்த்தனைகளில் இணை கையெ ழுத்திட ஊராட்சி மன்ற 5 ஆவது வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கழனிவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ரமாகுமார். இதே ஊராட்சியில் துணைத் தலைவராக இருப்பவர் கே.பெரமையன். அலுவலக ரீதி யாகப் பணியாற்றுவதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இடையே, சுமுகமான சூழ் நிலை நிலவாததால், அவசரப் பணிகள் நடைபெற ஒத்துழைப்பு தராது, நிதி பரிவர்த்த னைகளில் கையொப்பமிட தொடர்ந்து மறுத்து வருவதாலும், ஊராட்சி நிர்வாக நலன் கருதி, ஊராட்சி நிதி பரிவர்த்தனை களில், இணைக் கையொப்பமிட, ஊராட்சி உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்து கழனி வாசல் ஊராட்சியில் கடந்த ஆக.17 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கழனிவாசல் ஊராட்சியில் இணைக் கையொப்பமிட ஊராட்சியில் 5 ஆவது வார்டு உறுப்பினர் பா. நாகலட்சுமி என்பவரை தற்காலிகமாக நிய மித்து, கழனிவாசல் ஊராட்சி தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. எனவே ஊராட்சி தீர்மானத்தின் அடிப்ப டையிலும், ஊராட்சிகளின் ஆய்வாளர் அதி காரத்தின்படியும், கழனிவாசல் ஊராட்சி நிர்வாக நலன் கருதி, ஊராட்சி நிதி பரிவர்த்தனைகளில் இணை கையொப்ப மிட பா.நாகலட்சுமி என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார். இதன் மூலம், ஊராட்சி நிதி நிர்வாகத் தில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.பெரமையன் கையெழுத்து தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.