தஞ்சாவூர் ஜன.17- தஞ்சாவூர் மாவட்டம் பிர வுசர் புத்தக நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங் கல் விழாவை முன்னிட்டு, மாபெரும் புத்தகச் சந்தை தொடக்க விழா மருத்துவக் கல்லூரி சாலை ரகுமான் நக ரில் நடைபெற்றது. புத்தகச் சந்தை விழா பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.வீரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முதல் விற்பனை பிரதியை முனைவர் கனிமொழி செல் லத்துரையும், தமிழ்நாடு ஆசி ரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.ரக மதுல்லாவும் பெற்றுக் கொண் டனர். புத்தகச் சந்தையில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் நூல்களை வாங்கிச் சென்றனர்.