தஞ்சாவூர், பிப். 8- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி தமிழ்த்துறையும், மலேசியாவின் வாதினி நுண்கலை அரங்கமும், கோவில்பட்டி கோவிந்தன் அறக் கட்டளையும் இணைந்து திருநங்கையர் – சமூகப் பார்வை என்னும் தலைப்பில் நடத்திய இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பன்னாட்டு கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்துப் பேசுகையில், “முற்பட்ட காலத்தில் அலி என்றும், பேடி என்றும், அரவாணி என்றும் கேலியாக அழைக்கப்பட்ட அவர்களுக்கு ஓர் அங்கீகாரப் பெயரை சூட்டும் வண்ணம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறி ஞர் கலைஞர் மு.கருணாநிதி ‘திருநங்கை’ என்னும் பெயரை சூட்டி சிறப்பித்தார். திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், 2008 ஏப்ரல் 15 ஆம் நாள் தமிழக அரசு திருநங்கைகளுக்குத் தனி நல வாரியம் அமைத்து, ஏப்ரல் 15 ஆம் நாளை ஆண்டுதோ றும் ‘திருநங்கையர் தினமாக’ கொண்டாட 2011 இல் அர சாணையும் பிறப்பித்துள்ளது. வரலாற்றில் குப்தர் காலம் தொட்டு, தில்லி சுல்தான்க ளின் ஆட்சியில் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி யான மாலிக் கபூர் வரை திருநங்கையாக இருந்து ஆட்சிக்கு வலு சேர்த்த குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ் பல்கலைக்கழகத்திலும் இத்தகு தன்மை கொண்ட ஒரு வருக்கு முதுகலைப் படிப்பில் முக்கியத்துவம் அளித்து இடம் வழங்கப்பட்டுள்ளது” என்றார். பிப்.2 முதல் பிப்.4 வரை நடைபெற்ற இக்கருத்தரங் கின், தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் பெ.இளை யாப்பிள்ளை வரவேற்றார். மலேசியாவின் தெங்கு அம்பு வான் துல்சான் ஆசிரியர் கல்வியியல் கழக மொழிப்புலத் தலைவர் முனைவர் துரைமுத்து சுப்பிரமணியம் கருத்த ரங்க நோக்கவுரை ஆற்றினார். மேலும், மலேசியாவின் வாதினி நுண்கலை அரங்கத்தைச் சார்ந்த டத்தின் பர மேஸ்வரி பன்னீர்செல்வம், கருத்தரங்க முன்னோட்ட உரையாற்றினார். நிறைவாக, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கோ.சந்தனமாரியம்மாள் நன்றி கூறினார்.