districts

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.12 -  தீபாவளிக்கு சென்னை யில் இருந்து சிறப்பு விரைவு ரயில் விட வேண்டும் என  பட்டுக்கோட்டை  வட்ட ரயில்  பயணிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், “இந்த வருடம் தீபாவளி பண் டிகை அக்.24 (திங்கள் கிழமை) அன்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் வசித்து வரும் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதி ராம்பட்டினம், முத்துப் பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திரு வாரூர், மயிலாடுதுறை பகுதி  மக்கள் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து செல்ல, சென்னை - காரைக் குடி தீபாவளி விழாக்கால சிறப்பு விரைவு ரயில் வசதி யினை தென்னக ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டுகிறோம்.  தீபாவளி விழாக்கால சிறப்பு ரயிலை 21.10.2022 (வெள்ளிக்கிழமை) முதல்  25.10.2022 (செவ்வாய்க் கிழமை) வரை சென்னை எழும்பூரில் இருந்து மயி லாடுதுறை - திருவாரூர் -  திருத்துறைப்பூண்டி - தில் லைவிளாகம் - முத்துப் பேட்டை - அதிராம்பட்டினம் -  பட்டுக்கோட்டை பேராவூ ரணி - அறந்தாங்கி - காரைக் குடி வரை இயக்க இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். மேலும் இந்த ரயி லில், அதிக அளவில் இரண் டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகளை இணைக் கவும் வேண்டுகிறோம்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.