தஞ்சாவூர், மார்ச்.6- தஞ்சாவூர் மாவட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப்செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நில வரைபடம் மின்சார இணைப்பு அட்டை விப ரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் விண்ணப்பிக்கலாம். தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங் களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாப நாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்ப னந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயி கள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவல கம், தொழில் பேட்டை அருகில், திருபு வனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்ப கோணம் - 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூ ரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக் கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை -614 601 என்ற முகவரி யிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.