districts

img

பேராவூரணி தொகுதியில் 8 கோயில்களுக்கு குட முழுக்கு செய்ய ரூ 4 கோடி ஒதுக்கீடு முதலமைச்சருக்கு என்.அசோக்குமார் எம்எல்ஏ நன்றி

தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், 8 கோயில் களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக தலா ரூ.50 லட்சம் வீதம், ரூ.4 கோடியை தமிழக அரசின் அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  ‘‘மே 4 அன்று சட்டப்பேரவையில், எனது கோரிக் கையை ஏற்று, இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, தமிழக முதல்வர் அறிவுறுத்த லின்பேரில் அறநிலையத்துறை அமைச்சர், பேரா வூரணி தொகுதியில், பேராவூரணி பிரசன்ன வெங்க டேசப் பெருமாள் கோயில், பேராவூரணி பொன்-காடு பொன்னி விநாயகர் கோயில், செங்க மங்கலம் தெய்வாங்கப் பெருமாள் கோயில், ஆவணம் - பெரியநாயகிபுரம் சுயம் பிரகாச சுவாமி கோயில், தளிகைவிடுதி திருப்பணங்காடுடையார் கோயில், எட்டிவயல் சுப்பிரமணியசுவாமி கோயில், வெள்ளாளங்காடு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், அம்மணிசத்திரம் சுந்தர கோதண்டராம சுவாமி கோயில் ஆகிய 8 பழமை வாய்ந்த கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கி, தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடும், இதேபோல், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக தனியாக ரூ,1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்தமைக்கு, எனது சார்பிலும் தொகுதி மக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்’’.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.