districts

img

தமுஎகச தேசியக் கொடி பயணக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர், ஆக.11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு  ஆகஸ்ட் 12 முதல் 15 வரை குமரி மாவட் டம் மார்த்தாண்டத்தில் நடைபெறு கிறது.  இதையொட்டி, குடியாத்தம் முதல் குமரி வரை தேசியக்கொடி பயணக்  குழு மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் தலைமையில் செல்கிறது.  இந்த கொடிப் பயணக் குழு விற்கு, செவ்வாயன்று தாராசுரம் கடை வீதியில், கும்பகோணம் மாமன்ற மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்  செல்வம் தலைமையில் வரவேற்ப ளிக்கப்பட்டது. இதில், தமுஎகச மாவட்  டத் தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.விஜயகுமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தஞ்சையில் மேல வீதி தஞ்சை  நால்வர் இல்லம் அருகில் வரவேற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. பரதக் கலை ஞர் பாலசரஸ்வதி அம்மையாரை சிறப்  பிக்கும் வகையில் தேசிய கொடி வர வேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற் றது.  இதில் தஞ்சை மாநகர மேயர்  சண்.ராமநாதன் கலந்து கொண்டு  வாழ்த்திப் பேசினார். மாவட்ட தலை வர் சா.ஜீவபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செய லாளர் சின்னை.பாண்டியன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  ஒரத்தநாடு கடைவீதியில், பேரூ ராட்சி பெருத்தலைவர் மா.சேகர் தேசி யக்கொடியை பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார். கிளைத் தலைவர் சுனந்தா சுரேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சுந்தரமூர்த்தி வர வேற்றார்.

இதில், விவசாய தொழிலா ளர் சங்கம் வெங்கடேசன், வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா  உள்ளிட்டோர் கலந்து கொண்  டனர்.  ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கொடிப் பயணம் குறித்து பட்டுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் தி.தன பால், மாவட்டச் செயலாளர் விஜய குமார், மாநில துணை பொது செயலா ளர் களப்பிரன் ஆகியோர் உரையாற்றி னர்.  பேராவூரணியில் தமுஎகச நிறு வனத் தலைவர்களில் ஒருவரான கே. முத்தையா இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிப் பயணக் குழு வினர் கே.முத்தையாவின் அலங்கரிக் கப்பட்ட உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து தூத்துக்குடி நோக்கி பயணக் குழு புறப்பட்டு சென்றது. அனைத்து இடங்களிலும் வேலூர் சாரல் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.