districts

img

சிபிஎம் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு காஞ்சிவாய் கிராமத்தில் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மயிலாடுதுறை, டிச.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மயிலாடு துறை மாவட்டம் முழுவதும்  250 கிலோ மீட்டர் தூர நடை பயணம் 4 ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. மயிலாடுதுறை நகரப் பகுதியில் நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய்  தலைமையில் பாரம்பரிய இசை முழக்கத்துடன், பட்டா சுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. திங்க ளன்று மாலை மாப்படுகை  கடைவீதியில் மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உரையாற்றினர்.  செவ்வாயன்று 4 ஆவது நாள் நடைபயணம் குத்தா லம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரத் தில் துவங்கி காஞ்சிவாய், திருமங்கலம், ஏ.கிளியனூர், மங்கைநல்லூர் வழியாக  பெரம்பூரில் நிறைவடைந் தது. ஒவ்வொரு கிராமங்களி லும் மிகுந்த உணர்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சி தங்கள்  பகுதிகளில் கடந்த காலங்க ளில் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களை நினைவு கூர்ந்தனர்.  முன்னதாக, காஞ்சி வாய் கிராமத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சம்பா ராமசாமி,  நல்லக்கண்ணு ஆகியோ ரின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீரவணக்கம் செலுத்தி, நடைபயணத்தை தொடர்ந்தனர்.