தஞ்சாவூர், ஆக. 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி செந்தமிழ் நகர் நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர், வைரக்கண்ணு - நீலா தம்பதி. இவர்களது மகன் சின்னதுரை தான் சார்ந்த சமூகத்தில், முதல் முறை மாணவராக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருச்சி கல்லூரியில் சேருகிறார். வறுமை நிலையில் உள்ள இவருக்கு உதவு மாறு தீக்கதிரில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி விரி வான செய்தி வெளியானது. இதையடுத்து, சிபிஎம் ஆத னூர் கிளைச் செயலாளரும், துளிர் நண்பர்கள் அறக்கட் டளை பொருளாளருமான பேரா வேத.கரம்சந்த் காந்தி தலைமையில் பேராவூரணி துளிர் நண்பர்கள் அறக்கட் டளை சார்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை, மாண வன் சின்னத்துரை மற்றும், அவரது பெற்றோரிடம் நேர டியாக வழங்கினர் இந்நிகழ்வில், தலை வர் பழனி அரசையா, செய லாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் வேத.கரம் சந்த் காந்தி, உறுப்பினர்கள் நீலகண்டன், நாகேந்திரன், வன்மீகநாதன், சண்முக நாதன், கவின், ஆசிரியர் ஹாஜா முகைதீன் ஆகி யோர் கலந்துகொண்டனர். இதேபோல், மாணவ ரின் படிப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட மருத்துவர் நீலகண்டன் ஏற்பாட்டில், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவதாஸ் மற்றும் புதுக்கோட்டை ஸ்டடி சென்டர் சார்பில், மாணவருக்கு ஆடைகள், காலணி, பேக், பெல்ட், சூட் கேஸ் உள்ளிட்ட ரூ.8,600 மதிப்பிலான பொருட்களை மாணவர் சின்னத்துரையிடம் டாக்டர் துரை.நீலகண்டன் வழங்கினார்.
தீக்கதிருக்கு நன்றி
மேலும் பலர் மாணவ ருக்கு உதவி வருகின்றனர். தனது சூழ்நிலையை வெளியில் எடுத்துச் சென்ற தீக்கதிர் நாளிதழுக்கும், தனக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் மாணவர் சின்னத்துரை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.