தஞ்சாவூர், டிச.24 - தென்னிந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில், ‘தங்கத் தேர்’ (Golden Chariot) எனும் சொகுசு ரயில் கர்நாடக மாநிலத்தில் இருந்து இயக்கப் படுகிறது.
இந்த ரயிலில் 80 நபர் கள் வரை பயணிக்க முடியும். இந்த ரயிலில் டி.வி., வைஃபை வசதி, சிசிடிவி கேமரா, ஸ்பா, உடற்பயிற்சி கூடம் ஆகி யவை உள்ளன. மேலும், இரண்டு உணவகங்கள் தனியாக உள்ளன. ‘கர்நாடகத்தின் பெருமை’ எனும் பெயரில், இயக்கப்படும் இந்த ரயில் பெங்க ளூருவில் கடந்த டிச.21 அன்று தனது பய ணத்தை துவங்கி, பந்திப்பூர், மைசூர், ஹலேபிடு, சிக்மகளூர், ஹம்பி, கோவா ஆகிய நகரங்களுக்கு 6 நாள் பயணமாக இயக்கப்படுகிறது.
இதே போன்று, ‘தெற்கின் நகைகள்’ எனும் பெயரில் மற்றொரு ரயில் சேவை பெங்களூருவில் துவங்கி மைசூர், காஞ்சி புரம், மகாபலிபுரம், தஞ்சாவூர், காரைக்குடி செட்டிநாடு, கேரளா மாநிலம் கொச்சின், சேர்தலா ஆகிய நகரங்களுக்கு 6 நாள்கள் பயணமாக இயக்கப்படுகிறது.
இதில், ‘தெற்கின் நகைகள்’ ரயிலானது 31 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன், கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம், மகா பலிபுரம் சென்றது. அங்குள்ள சுற்றுலா தலங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து திங்கள் கிழமை காலை தஞ்சாவூர் ரயில் நிலை யத்திற்கு வந்த ரயிலை, ரயில்வே சுற்றுலா அலுவலர்கள் வரவேற்றனர். அதில் வந்த சுற்றுலா பயணிகள் தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, சரசுவதி மகால் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
பிறகு திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு ரயில் நிலை யத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், ரயில் மூலம் காரைக்குடி - செட்டிநாடு நோக்கி புறப்பட்டனர். சுற்றுலா ரயிலில் வந்த வெளிநாட்டு பயணிகள் இதுகுறித்து கூறுகையில், “இந்தி யாவின் பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை பார்ப்பது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது” என்றனர்.