கும்பகோணம், மார்ச் 10- பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இந்த வருட பருவ தேர்வுக்கான கட்ட ணத்தை உயர்த்தியதை கண்டித்து போராடிய இந்திய மாணவர்கள் சங் கத்தினர் மீது ஏவப்பட்ட காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டி த்து தஞ்சை மாவட்டம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனொரு பகுதியாக மாணவர் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் ஒன்றியத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் ஹரிஹரன் தலை மை வகித்தார். ஒன்றியச் செயலாளர் த.அன்புமணி, மாவட்ட துணைத் தலை வர் சந்தோஷ் குமார், ஒன்றி யக் குழு உறுப்பினர் விஜ யாலயன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.