நாகர்கோவில், ஆக.18- அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிறைட் தலைமை வகித்தார். மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார் உரையாற்றினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் காஸ்ட்ரோ, பெனிஸ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருங்கல், கலிங்கராஜபுரம், உண்ணா மலைகடை, அருமனை, மேல்புறம் , திரு வட்டார், கோதையார் உள்ளிட்ட இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.