கும்பகோணம். டிச. 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராக சின்னை.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட 24-ஆவது மாநாடு, கும்பகோணத்தில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் (ஏ.பி. மஹால்) நடைபெற்றது.
மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் துவக்கவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ வாழ்த்திப் பேசினார்.
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி நிறை வுரையாற்றினார்.
புதிய மாவட்டக்குழு
மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக சின்னை. பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் களாக ஆர். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில் குமார், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமார், எஸ். தமிழ்ச்செல்வி, கே. அருள ரசன், எம். செல்வம், ஆர். கலைச்செல்வி, என். சர வணன், எஸ். செல்வராஜ், கே. அபிமன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
பெஞ்சால் புயல்- கன மழையால் தஞ்சை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக் கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்; மாவட் டம் முழுவதும் சேதமடைந் துள்ள ஆயிரக்கணக்கான தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்; கும்ப கோணம் - விருத்தாச்சலம் புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும்; தஞ்சாவூர் - மயிலாடுதுறை - விழுப்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்; ஆடுதுறையில் விவசாய வேளாண் ஆராய்ச்சி பல் கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.