தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு ஜெப மாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கு மற்றும் ஆங்காங்கே நுண்ணுரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுவது வழக்கம். இந்த வார்டுகளில் தின மும் 105 முதல் 115 டன் வரை குப்பைகள் அகற்றப் பட்டு வருகின்றன. மாநக ராட்சி தூய்மைப் பணியாளர் கள், ஒப்பந்த பணியாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரு கிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. குப்பைகள் குவிந்தன தஞ்சை காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, பைபாஸ் நிலைய பகுதி, அண்ணாசாலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழஅலங்கம், தெற்கு வீதி, கீழராஜவீதி, திலகர் திடல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் தரைக் கடைகளும் வழக்கத்தை விட அதிக அளவில் போடப் பட்டன. தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முந்தைய நாள், இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. தீபாவளி கடைகள் அகற்றப்பட்ட பின்னர் குப்பைகளும் ஆங் காங்கே தேங்கிக் கிடந்தன. கடைவீதிகளின் அனைத்து பகுதிகளிலும், முக்கிய வீதி களிலும் வழக்கத்தைவிட குப்பைகள் அதிக அளவில் காணப்பட்டன. 300 டன் குப்பை அகற்றம் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும், தீபா வளி பண்டிகை நாளிலும் வழக்கமான குப்பைகளு டன், பட்டாசு குப்பைகளும் சேர்ந்ததால் 2 நாட்களில் குப்பைகள் அதிகமாகின. எனவே, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் 600 பேர் குப்பை களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் லாரிகள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் என 40 வாகனங்கள் பயன்படுத் தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 300 டன் குப்பை கள் அகற்றப்பட்டன. ஒரே நாளில் 2 மடங்குக்கும் அதிக மான குப்பைகள் அகற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது.