தென்காசி, டிச.23- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் முழு நேர கிளை நூலக புதிய கட்டிடத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
டிச.22 ஞாயிறன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசு தேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக் குமார் முன்னிலையில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் 2022-2023 மேம்பாட்டுத்திட்டம் நிதி ரூ-30 இலட்சமும், சங்கரன்கோவில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் 2022-2023 மேம்பாட்டுத் திட்டம் நிதி ரூ,20 இலட்சம் என மொத்தம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் முழுநேர கிளை நூலக புதிய கட்டிடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இந்நூலகம் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவி யர்களின் வாசிப்பினை ஊக்கப்படுத்தவும், போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள் ளது. இங்கு மத்திய அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலான புத்தகங்களும், தமிழ்நாடு அரசுப்பணியா ளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மாணவ, மாணவியர்க ளுக்கு பயன்படும் வகையிலான அனைத்து புத்தகங்க ளும் உள்ளன. எனவே, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இந்நூல கத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (தென்காசி) தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, முதன்மைக்கல்வி கல்வி அலுவலர் எல்.ரெஜினி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) சண்முக சுந்தரம், பாரதி வாசகர் வட்டம் கௌரவத்தலைவர் வெள்ளைச்சாமி (எ) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.