தென்காசி, ஜூலை 14 - தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் 354 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17,349 மாண வர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 15.7.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கடம் பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில், ஜூலை 15 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தொ டங்கி வைக்கிறார். மாணவ-மாணவி யரின் கற்றல் திறன் மேம்பட செயல் படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்கீழ் தென்காசி மாவட்டத்தில் 354 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 23,028 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான காலை உணவு வழங்கப்படும். திங்கள்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை - கோதுமை உப்புமா, காய்கறி சாம்பார், புதன் கிழமை - வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் ஆகிய உணவு வகைகள் மாணவ-மாணவியருக்கு வழங்கப் படுகிறது.
திங்களன்று தென்காசி வட்டாரம், மத்தளம்பாறை ஊராட்சி விவேகா னந்தா நடுநிலைப் பள்ளியில் நடைபெ றும் இத்திட்டத்தின் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பழனி நாடார், குருவிகுளம் டிடிடிஏ பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி யில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின் முறை பள்ளி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாசு தேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.சதன் திருமலைகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.