தென்காசி, டிச.23- சென்னை தலைமை செயலகத்திலிருந்து தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.46 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக திங்களன்று (டிச) மாவட்ட ஆட்சியர் ஏ.கேகமல்கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பி னர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார் கள். சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருது பெற்ற வரக னூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமியை முதல மைச்சர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் விஜயலெட்சுமி கனகராஜ், துணைத்தலைவர் முருகேஸ்வரி கோட்டியப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் தேவி ராஜகோபால், சுதா பிரபாகரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, செயற்பொறி யாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) ஏழி சைச்செல்வி, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ரவிச்சந்திரன், அருள்செல்வன் தெற்கு குருவிகுளம் ஊராட்சிமன்றத் தலைவர் குணசுந்தரி, குருவிகுளம் வட்டார வளர்ச்சி பொறியாளர் முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.