districts

குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்கம்

தென்காசி, ஆக.17- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங் கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை 4 நாட்கள் குற்றாலம் சாரல் திருவிழா நடைபெறவுள்ளது. துவக்க விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பி னர் தி.சதன் திருமலைக் குமார் மாவட்ட பஞ்சாயத்து  துணைத் தலைவர் ஆயிரப் பேரி தி உதயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்றல் தவழும் தென் காசி மாவட்டத்தில் நடக்கும் சாரல் திருவிழா நமது மாவட்டத்தில் ஒரு முக்கிய பெருவிழா. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.

நமது மாவட்டத்தில் சுற்று லாவை மேம்படுத்துவற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக ஐ லவ் குற்றாலம் செல்ஃபி  பாயிண்ட் அமைக்கப்பட்டு உள்ளது. 

நமது மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பய ணிகளை நமது விருந்தி னர்கள் போல் மரியாதையு டனும் அன்புடனும் நடத்த  அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என ஆட்சி யர் தெரிவித்தார்.