தென்காசி, ஆக.28 - சுரண்டை அருகே வாடியூர் பகுதியில் புத னன்று (ஆக.28) காலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விவசாய வேலைக்காக சென்ற மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை - திருச்சிற்றம்ப லத்திலிருக்கு ஆணைக் குளம் பகுதிக்கு வயல் வேலைக்காக சுமார் 15 பேர் சரக்கு ஏற்றும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோவை கீழச்சுரண்டை பகுதியைச் சேர்ந்த முரு கன் மகன் தேவேந்திரன் (25) என்பவர் ஓட்டியுள்ளார். அந்த ஆட்டோ திருச்சிற்றம்பலம் - சுரண்டை வழியாக, வாடி யூர் மேல்புறத்தில் வளை வில் திரும்பும்போது கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர்.
இதுகுறித்து தகவ லறிந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான எஸ். பழனிநாடார் மற்றும் சுரண்டை காவல்துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய 12 நபர்களையும் ஜெசிபி உதவியுடன் மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலியான மூன்று பெண்களின் உடல் களை மீட்டு கூறாய்வுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுரண்டை காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில், இறந்த நபர்கள் திருச்சிற்றம் பலம் பள்ளிக்கூட தெரு வைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஜானகி (52), அதே பகுதியைச் சேர்ந்த மாட சாமி மனைவி வள்ளியம் மாள் (60), தங்கமணி மனைவி பிச்சியம்மாள் (60) என்பது தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்மு கம், மாநிலக் குழு உறுப் பினர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் உ. முத்துப் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுமயில் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சிகிச்சை பெற்று வரும் பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தோரின் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சி யரை அவரது அலுவல கத்தில் நேரில் சந்தித்து, விபத்தில் இறந்த பெண் களுக்கு தலா ரூ.10 லட்ச மும், சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை மனுவாக கொடுத் தனர்.
இந்த சம்பவம் குறித்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி கூறு கையில், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கே அரசு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளது. தங்கள் வாழ்வாதாரத் திற்காக சென்ற போது, விபத்தில் உயிரிழந்த கூலித் தொழிலாளிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என அரசை கோருகிறோம். அப்பகுதியில் போதுமான நாட்கள் நூறு நாள் வேலை கிடைக்காத நிலை யில், 15 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் சென்று அப்பகுதி பெண்கள் விவ சாயக் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வாய்ப்பை தருவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.