districts

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது  

தென்காசி, ஜுலை 6 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்  மாவட்டம் முழுவதும் காவல் துறை யினர் கஞ்சா மற்றும் புகை யிலை பொருட்கள் விற்ப னையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட மேல நாலந்து லா பகுதியில் தடை செய் யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக் காக வைத்திருந்த   பொம் மையா  மீது சார்பு ஆய்வா ளர்  முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.