உதகை, மார்ச் 14- நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட புகையிலை மற்றும் போதைபாக்கு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என உதகை நகர மக்கள் சங்கத்தினர் வலியு றுத்தியுள்ளனர். உதகை நகர மக்கள் விழிப்புணர்வு கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலை மையில் வியாழனன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத் தப்படும் நுகர்வோர் கூட்டமைப்பு கூட்டங் களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். தொட்டபெட்டா பகுதியில் பச்சை குத்துதல் குறித்து சுகாதாரத்துறை ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். உதகையில் இருந்து கேரள மாநிலங்களுக்கு செல்லும் சில அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்டும் இந்த வழியில் பேருந்துகள் இயக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகள் நீலகிரி மாவட்டத்தில் சில்லரை கடை களில் சட்டவிரோதமாக விற்பனை செய் யப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பராமரிப்பின்றி உள்ள நகராட்சி பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.