தாராபுரம், மார்ச். 20 -
மதத்தை முன்னிறுத்தி வெற்றி பெறலாம் என நினைப்பவர்களின் கனவை சிதறடிக்க வேண்டும் என தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
திருப்பூர் மாவட்டம், தாரா புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் கயல்விழி செல்வராஜ் போட்டி யிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான கனிமொழி தேர்தல் பிரச் சாரம் செய்தார்.
தாராபுரம் காவல் நிலையம் அரு கில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசு கையில், இந்த தொகுதியிலே திமுக வேட்பாளர் கயல்விழி செல்வ ராஜூக்கு எதிராக அதிமுக கூட்ட ணியின் பாஜக தலைவர் எல்.முரு கன் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக வினர் சமூக நீதிக்கு எதிராகவும், தமிழர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும், மொழியை யும் அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக் கிறார்கள். அதனை நாம் அழித்து விட வேண்டும். இந்த களத்தில் நமக்கு எதிராக நிற்பவர் யார் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நம் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவராகி, இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் பாடு பட்டனர். ஆனால், அதை யெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட வேண்டும் என்று நீட் தேர்வை கொண்டு வந்து மருத்துவக் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நிலைக்கு காரணம் பாஜகவும், அதிமுகவும் தான். இந்த தேர்தல் மூலம், நமது மக்களின் சுயமரி யாதைக்கு, தன்மானத்திற்கு விடப் பட்ட சவால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வரு வதற்கு முன்பிருந்தே காலங் காலமாக இங்கு எல்லா மதத்தினரும் தங்களது கடவுள்களை வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கின்ற னர். அனைத்து மதத்தை சேர்ந்தவர் களும் தமிழர்கள் என்ற உணர் வோடு இணைந்து செயல்பட்டிருக் கிறோம். ஆனால், தற்போது பாஜக இங்கு மதத்தை முன்னிறுத்தி நம்மை பிரித்து, அரசியல் ஆதாயம் அடை யலாம் என்று நினைக்கிறது. எனவே, இங்கு வெற்றி பெற்று தமி ழகத்தை கைப்பற்றிவிடலாம் என்ற அவர்களின் கனவை அடியோடு ஒழித்துவிட வேண்டும். இதுவே நமது தலையாய பணி ஆகும்.
பிரதமதர் மோடி திடீரென அறி வித்த பணமதிப்பு நீக்கத்தால் பொதுமக்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு, தற்போது வரை மீளமுடி யாமல் தவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பெரும் பாலான தொழில்கள் முடங்கி விட்டன. கெரோனா பொதுமுடக் கம், பெட்ரோல், டீசல் விலை உயர் வால் மக்கள் சொல்ல முடியாத துய ரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது, என்பதை நினைவில் கொண்டு தாராபுரத்தில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் எல்.முரு கனை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும், என்றும் கனிமொழி கூறி னார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக் கும் அதிமுகவால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கடந்த 4 ஆண்டு களாக அதிமுக ஆட்சி பாஜகவில் பினாமி ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சாடினார்.