districts

img

தாராபுரம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

தாராபுரம், மார்ச் 18-

தாராபுரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு எழுச்சி யுடன் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் பணிமனை திறப்பு விழா வியாழன்று நடைபெற் றது. முன்னதாக, தாராபுரத்தில் உள்ள அண்ணாசிலை மற் றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செய லாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று தாராபுரம் பேருந்து நிலையம் அரு கில் உள்ள புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைக் கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் கே.எஸ்.தன சேகர், ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தாரா புரம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.காளிமுத்து, மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.