districts

img

தாராபுரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளருக்கு அமோக ஆதரவு

தாராபுரம், மார்ச் 22-

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜூக்கு வாக்கு சேகரிக்க செல்லுமிடங்களில் பொதுமக்கள் ஆமோக ஆதரவு தெரிவித்து வரு கின்றனர்.

தாராபுரத்தில் சட்டமன்ற தொகு தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் கயல்விழி செல்வராஜ் போட்டி யிடுகிறார். இவர் கூட்டணி கட்சியி னருடன் சென்று தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  ஞாயி றன்று காலை தாராபுரத்தில் உள்ள தேவாலயங்களில் நகர செயலாளர் கே.எஸ். தனசேகர் தலைமையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற் றது. அப்போது அங்கு வழிபாட் டிற்கு வந்திருந்த பொதுமக்கள், கயல்விழி செல்வராஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஆதரவு தெரி வித்தனர்.

மேலும் திமுக மாபெரும் வெற்றி பெற கூட்டு வழிபாடு செய்தனர். அதி முக - பாஜக ஆட்சியில் மக்கள் அன் றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண் டர், பெட்ரோல் மீது அதிக வரி விதித்து வருகின்றனர். இதனால் கடும் இன்னலுக்கு உள்ளாகி வரும் மக்கள் அதிமுக வை அதிகாரத்திலி ருந்து அகற்ற  மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியை ஆதரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தாராபுரம் நகர, ஒன்றிய பகுதிக ளில் வாக்கு சேகரிக்க கயல்வழி செல்வராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வர வேற்பு அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.