districts

img

தாய் தந்தையை இழந்து தவிக்கும் சிறுவர்கள் விரைந்து நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

தாராபுரம், ஜூன் 6- தாராபுரத்தில் தாய் ஏற்கனவே இறந்த நிலையில் தந்தையும் கொரோ னாவால் உயிரிழந்ததால், ஆதர வின்றி தவிக்கும் சிறுவர்களுக்கு அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள கொண்டரசம்பாளையம் கிரா மம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(45).இவரது மனைவி கார்த்திகா இவர்களுக்கு தரணிஷ் (13), ரித்விக் (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.கார்த் திகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரண மாக இறந்துவிட்டார். இதனால், இருமகன்களையும் செந்தில்குமா ரின் மாமியார் தேவி பராமரித்து வந் தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமா னதால் ஆபத்தான நிலையில் பெருந் துறை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலை யில், சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பல னின்றி இறந்துவிட்டார். இதனால் ஏற் கனவே தாயை இழந்த நிலையில் ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் கொரோனாவால் உயிரிழந்துவிட்ட தால் இரண்டு சிறுவர்களும் ஆதர வற்ற நிலையில் உள்ளனர். பாட்டி தேவியும் வயதான நிலையில் எந்த  வருமானமும் இல்லாத சூழலில் தொடர்ந்து பராமரித்து, படிக்க வைக்க முடியாத நிலையில் உள் ளார். இதையறிந்த, மார்க்சிஸ்ட் கட்சி தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் சிறுவர்களை சந் தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் ஆதர வற்று இருக்கும் இரண்டு சிறுவர்க ளுக்கும் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்கி இரண்டு சிறுவர்க ளையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.