தாராபுரம், செப்.6- தாராபுரம் அரசுபள்ளி ஆசிரியர்கள் 3 பேர் நல்லாசியர் விருது பெற்றுள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர் களை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர். ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சிறப் பாக பணியற்றிய அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள் ளது.
அதில் தாராபுரம் வட்டத்தில் செலாம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் என். தெய்வீகம், கரையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வி. கல்பனா, தாராபுரம் புனித அலோசி யஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் எம். பழனிச்சாமி ஆகியோருக்கு நல்லாசியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழா வில் மாவட்ட ஆட்சியர் வினித் விருதுகளை வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், மாணவர் கள் மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரி வித்தனர்.