districts

img

சிவகாசியில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.2.59 லட்சம் அ.சவுந்தரராசனிடம் வழங்கல்

சிவகாசி மாநகரில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். சுரேஷ் குமார் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, பி.என்.தேவா, கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து  மாவட்ட செயலாளர் கே. அர்ஜுனன் பேசினார். அதில், சிவகாசி மாநகர அமைப்புக்குழு சார்பில் ஆண்டுச் சந்தா 111 மற்றும் 6 மாதச் சந்தா 15 -ம் வழங்கப்பட்டது. மேலும் வெம்பக்கோட்டை ஒன்றிய குழு சார்பில் ஆண்டுச் சந்தா 2, ஆறு மாதச் சந்தா 22 வழங்கப்பட்டது.  6 மாதச் சந்தா 37 என மொத்தம்  150 சந்தாக்களுக்கான தொகை ரூ 2 லட்சத்து 59 ஆயிரத்து 750-ஐ  கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினர். பெரியநாயகம் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி வேலுச்சாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எம். முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.