தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் 12ஆம் ஆண்டு ஓய்வூதியர் தின விழா சிவகாசியில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கா.சிவபெருமான் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நா.ஸ்ரீராமன், இரா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ச.வேல்சாமி வரவேற்புரையாற்றினார். விழாவை துவக்கி வைத்து மாநில பொருளாளர் ப.கிருஷ்ணன் பேசினார். சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் வாழ்த்துரை வழங்கினார். “நமக்கான மருந்து“ என்ற தலைப்பில் வைத்தியர் சிவ.கதிரவன் கருத்துரையாற்றினார். 75 வயது நிறைந்த உறுப்பினர்களுக்கு பாராட்டும், கௌரவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.