சிவகாசி, ஜூலை 9- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளை யார்குறிச்சியில் செவ்வா யன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
சிவகாசி அருகே உள்ளது காளையார்குறிச்சி கிராமம். இங்கு, தங்கையா என்பவ ருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபா வளி பண்டிகைக்கு தேவை யான பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
60-க்கும் மேற்பட்ட அறை களில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை யன்று காலை, வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வேதிப் பொருட் கள் கலக்கும் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறை வெடித்துச் சித றியது.
இந்த விபத்தில், அறையில் பணிபுரிந்த மாரியப்பன், முத்து முருகன் ஆகிய தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் சரோஜா , சங்கரவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத துறை நிலைய அதிகாரி வெங்க டேசன் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து நடை பெற்ற ஆலையில், வரு வாய்த்துறை மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: வெடிவிபத்தில் வெள்ளூர், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) மற்றும் முத்துமுருகன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வ தோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.