சிவகாசி, மே.,9- சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பெண் தொழிலாளர் கள் உட்பட 9 பேர் உடல் சிதறி பலியாகினர். 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி கிராமம். இங்கு, திருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம்-எரிபொ ருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழனன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதிப் பொருட்களில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்து டன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 அறைகள் இடிந்து விழுந்தன.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து நடைபெற்ற அறையிலிருந்து தீயானது, அருகில் உள்ள பல்வேறு அறை களுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பரவியது. இதனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிக் கொண்டே இருந்தன. இதன் காரணமாக யாரும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நீண்ட நேர மாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . இதனால், மீட்பு பணியிலும் சில மணி நேரம் தொய்வு ஏற்பட்டது
9பேர் பலி
பட்டாசு வெடிப்பது நின்றவுடன், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியும் உடல் சிதறியும் கிடந்த 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 9 தொழி லாளர்களின் உடலை மீட்டனர்.
இறந்தவர்களின் விபரம் வருமாறு :
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மச்சக்காளை என்பவர் மனைவி முத்து (57), அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), கல்போது கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29), மத்தியசேனை பகுதி யைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ் (31), சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன் (47) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் முகம் மற்றும் உடல்கள் சிதறி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
12 பேர் காயம்
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 12 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிவ காசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்பு, அங்குள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரி வில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
காயமடைந்தோர் விபரம் வருமாறு:
சிவகாசி, ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), அதே பகு தியைச் சேர்ந்த சித்திவிநாயகர் மனைவி மாரி யம்மாள்(50), அய்யம்பட்டியைச் சேர்ந்த இராம மூர்த்தி மனைவி நாகஜோதி(35), மத்திய சேனையைச் சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா (48), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ரெக்கம்மாள் (40), ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி சுப்புலட்சுமி (62), ரிசர்வ் லைன் காந்தி நகரைச் சேர்ந்த மூக்கன் மகன் திருப்பதி(47), அதே பகுதியைச் சேர்ந்த மகா லிங்கம் மகன் கண்ணன் (30), திருத்தங்கல்லைச் சேர்ந்த ஜெயராஜ் (42), மத்தியசேனையைச் சேர்ந்த பெருமாள் மகன் அழகுராஜா(30), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி அம்ச வள்ளி(32), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (39) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆய்வு
இந்தநிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிஐடியு ஆறுதல்
விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மற்றும் காய மடைந்த தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐடியு நிர்வாகிகள் கே.முருகன், பி.பாலசுப்பிரமணியன், எம்.முத்துச்சாமி, அம்பேத்குமரேசன், மாரிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிடுக!
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தா லும், உற்பத்தியாளர்களின் லாப வெறியின் காரணமாக வும், ஆலைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்யாததாலும் தொடர் விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசு, விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மற்றும் அதன் உரிமை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில், விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை யான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைகளில்தொடர் விபத்துக்கள் உயிரிழப்புகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துக!சிபிஎம் வலியுறுத்தல் 5