விருதுநகர், ஏப்.3- மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகாசி பாவடித் தோப்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.பால சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலா ளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. என்.தேவா, சட்டமன்ற உறுப்பி னர் ஜி.அசோகன், மேயர் சங் கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா, திமுக தொ குதி பொறுப்பாளர் ரஞ்சன் துரை, ஒன்றிய துணைத் தலை வர் விவேகன்ராஜ், சிபிஐ மாவட்டப் பொருளாளர் சமுத்தி ரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செல்வின் ஏசுதாஸ், மதிமுக மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டணிக் கட்சி தலைவர்கள் முகந்தன், கே.டி.ராஜ், விடியல் வீரப்பெருமாள், பூவை ஈஸ்வரன், ராமு, ஈஸ் வரபாண்டியன், முகமது இஸ் மாயில், வேலுபுள்ள பிரபாக ரன், இப்ராஹிம்ஷா உள்பட பலர் விளக்கிப் பேசினர்.
ஜெப ஜோதி நன்றி கூறினார். முன்னதாக புதுகை பூபாளம் கலைக் குழுவினரின் அரசி யல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “குஜராத்தில் போட்டியிடுவ தற்காக பாஜக சார்பில் அறி விக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் போட்டியிட மாட்டோம் என ஓட்டம் பிடித்துள்ளனர். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றதும் அமைச்சராக இருந்த வி.கே.சிங்கே போட் டியிலிருந்து விலகி ஓடுகிறார்.
இதனால் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தேர்தல் நெருங்க நெருங்க 100 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் மோடியின் எதிர்ப் பலை வீசுகிறது என்றார். “பிரதமர் நாடாளுமன்றத் திற்கு கட்டுப்பட்டவர். எதிர்க் கட்சிகள் கேள்வி கேட்டால் நியாயமான முறையில் பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உண்டு. இந்திய நாடு ஜவஹர்லால் நேரு துவங்கி ஏராளமான பிரதமர் களை பார்த்துள்ளது. எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாத பிரதமர் மோடி தான்.
புதிய நாடாளுமன்றத் திற்குள் சிலர் புகுந்து புகை குண்டுகளை வீசினர். அந்த நபர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கியது கர்நாடக மாநில பாஜக எம்.பி., இதுகுறித்து உள்துறை அமைச்சர் பதில ளிக்க வேண்டும் என எதிர்க் கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்காக 143 எம்பிக்களை சஸ்பெண்ட் செய் தனர்.
அதுகுறித்து இன்று வரை விசாரிக்கவில்லை’’ என கே.பாலகிருஷ்ணன் அம்பலப் படுத்தினார். ‘‘விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நியா யத்தை பிரதமர் மோடியிடம் கேட்பாரா? அல்லது குஜராத் மாநிலத்தில் மிகக் கொடூர மான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட இஸ்லாமிய பெண் பில்கிஸ் பானுவிற்கான நியா யத்தை கேட்பாரா? பாஜக வின் இச்செயலை நடிகை ராதிகா ஏற்றுக் கொள்வாரா?’’ என்றும் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
“மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளு க்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வில்லை. பட்டாசு ஆலை உரி மையாளர்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தள்ளுபடியாக வில்லை. ஆனால், அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.15 லட்சம் கோடி கடன்களை பிரத மர் மோடி தள்ளுபடி செய்துள் ளார்.
அந்த பெரும் நிதியை வைத்து ஏராளமான திட்டங்க ளை செய்திருக்கலாம். இந்தி யாவில் உள்ள அனைவருக் கும் கான்கிரீட் வீடுகளை கட்டி தந்திருக்கலாம். தரிசாக கிடக்கும் அனைத்து நிலங்க ளையும் முப்போகம் விளை யும் நிலங்களாக மாற்றியி ருக்க முடியும். ஆனால், பாஜசு அரசு, இந்தியாவின் சொத்துகளான விமான நிலையங்கள், விமா னங்கள், ரயில்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்வே நிலங்கள் என அனைத்தை யும் விற்கத் துடிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆட்சி யாக பாஜக ஆட்சி உள்ளது. ஆனால், இன்று நம்மிடம் வாக்குகள் கேட்டு வருகின்ற னர். அவர்களுக்கு சரியான பதிலடியை வாக்காளர்கள் தர வேண்டும்’’ என அவர் அழைப்பு விடுத்தார்.