districts

img

விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டம்

சிவகங்கை, நவ.26- விவசாயிகளுக்கு விரோத மான சட்டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தியும், தில்லியில் நடை பெற்ற போராட்டத்தில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை உட னடியாக செயல்படுத்த வலியு றுத்தியும் செவ்வாயன்று இந்தியா  முழுவதும் அனைத்து தொழிற்சங் கங்கள், ஐக்கிய முன்னணி விவ சாயிகள் சங்கம் சார்பில் போராட் டம் நடைபெற்றது

அதனொரு பகுதியாக, சிவ கங்கை ராமச்சந்திரா பூங்கா அருகே மாவட்டச் செயலாளர் காம ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீரபாண்டி துவக்கிவைத்து பேசி னார். விவசாயிகள் சங்க மாநிலத்  துணைத் தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விசுவ நாதன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் சேதுராமன், மாவட்டத் தலை வர் வீரையா, மின் ஊழியர் மத்  திய அமைப்பு மாநிலச் செயலா ளர் உமாநாத் மற்றும் சிபிஐ விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோபால், மாவட்டச் செயலாளர் காமராஜர், ஒன்றியச் செயலாளர் லட்சுமணன், சந்திரன், கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணியம்மா, சுரேஷ், ஒன்றியச் செயலாளர் உலக நாதன், சிபிஐ நகரச் செயலாளர் சகாயம், நகர்குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு எல்.பி.எப்  சார்பில் மாடசாமி தலைமையேற் றார். கோரிக்கைகளை விளக்க விவ சாயிகள்  சங்க மாவட்ட செயலாளர்  வி.முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகி யோர் பேசினர். இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர். 

இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் எல்பிஎப் மாவட்ட பொருளாளர் திருவேட்டை போத்தி  தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. சிஐடியு மாவட்டச்செய லாளர் பி.என். தேவா துவக்கி வைத்  தார். ஏஐடியுசி மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி, ஐஎன்டியுசி மாநில பொருளாளர் பிரபாகரன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் கண்ணன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், கன்வீனர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

நிறைவு செய்து அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் சுந்தர பாண்டியன் பேசினார். எல்பிஎப் செயலாளர் மாரிச்சாமி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் விஜயன், எச்எம்எஸ் தலைவர் மகாலிங்கம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கண்ணன், சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் சோமசுந்த ரம், கைத்தறி சங்க மாவட்டச் செய லாளர் ராமச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகி ஆர்.எம்.மாரியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி பெருமாள் மற்றும் கனக ராஜ் எம்.கே.பழனிச்சாமி, மகேஸ்வ ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.