districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை, நவ.26- சிவகங்கை மாவட்டம் முழு வதும் உள்ள வருவாய்த்துறை அலு வலகங்களில் பணியாற்றும் அலு வலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று முதல்  பணிகளைப் புறக்கணித்து தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற  பணி புறக்கணிப்பு போராட்டத் திற்கு மாநிலச் செயலாளர் தமிழர சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சேகர், மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த பூபாலன், வள னரசு, அசோக்குமார், புஷ்பவனம்  மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள்,  ஆட்சியர் அலுவலகத்தில் பணி யாற்றும் 50 பெண் அலுவலர்கள் உள்ளிட்ட 100 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் மாவட்டம்  முழுவதும் உள்ள 9 வட்டாட் சியர் அலுவலகங்கள், 2 வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பணியாற்றும் 400 வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநிலச் செயலாளர் தமிழரசன் கூறியதாவது:

சிவகங்கை மாவட்ட வரு வாய்த் துறையில் அலுவலக உதவி யாளர் நிலையில் 100க்கும் அதிக மான காலிப் பணியிடங்கள் உள்  ளன. மாநிலம் முழுவதும் 3000 பணி யிடங்கள் காலியாக இருக்கின் றன.

இதனால் மழை வெள்ள நிவார ணம், தமிழக அரசின் சிறப்பு திட்டங்  களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பணிகள் பார்ப்பது அலுவலக உதவியாளர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல இளநிலை வரு வாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் இடையேயான பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரை வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், வருவாய்த்துறையில் ஏற்கனவே இருக்கின்ற பணியிடங்களை கலைக்கின்ற நடவடிக்கையை கைவிட வேண்டும், உங்களைத்  தேடி உங்கள் ஊரில், மக்களுடன்  முதல்வர் போன்ற அரசின் திட்டங் களை செயல்படுத்துவதற்கு போதிய கால அவகாசமும் நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும்,

பேரிடர் மேலாண்மை பிரிவில்  கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளாக வெளி யிடப்படாமல் உள்ள துணை ஆட்சி யர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்  கான மாவட்ட வருவாய் அலு வலர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும், மண்டல துணை வட்டாட்சியின் பட்டா மாறுதல் அதிகாரத்தை பறிக்கக் கூடாது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

எங்களுடைய கோரிக்கை களுக்காக வருவாய்த்துறை அமைச்சரையும், வருவாய் துறை  உயர் அலுவலர்களையும் பல முறை சந்தித்து முறையீடு அளித் துள்ளோம்.

அத்துடன் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தமிழக முதல்வருக்கு பெருந்திரள் முறையீடு அனுப்பும் முதல் கட்ட இயக்கத்தையும், 29.10.2024 அன்று ஒரு நாள்  தற்செயல் விடுப்பு போராட்டத்தை யும் இரண்டாம் கட்டமாக அடை யாளமாக நடத்தியுள்ளோம்.

எங்களது போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு வரு வாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை திங்க ளன்று வெளியிட்டுள்ளது. அதனை  வரவேற்கின்றோம். மீதமுள்ள எட்டு கோரிக்கை கள் தொடர்பாக எவ்வித முன்னேற்  றமும் இல்லாத காரணத்தால் செவ்வாயன்று முதல் பணிகளைப்  புறக்கணித்து தொடர் காத்திருக்  கும் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம்.

இதனால் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை நிவாரண பணிகள் மேற்கொள்வதும், வாக் காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணிகளும், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசினுடைய  பாராமுகமே கார ணம்.

எனவே தமிழக அரசு இனி மேலும் காலம் தாழ்த்தாமல் எங்க ளது கோரிக்கைகளை நிறைவேற்றி  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாத  பட்சத்தில் இந்த போராட்டம் கால வரையற்று தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழு வதும் 380  வருவாய்த்துறை அலு வலர்கள் பணிப் புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டத்தலைவர் ஜான் பாஸ்டின், மாவட்டச்செயலாளர் சுகந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கத்  தின் மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக் அலி மற்றும் ராஜாமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் உஷா மாவட்ட துணைத்தலைவர் ராம்குமார் மாவட்டச் செயலாளர் மாயவன் உட்பட வருவாய்த்துறை ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கம்  சார்பில் மாவட்ட துணைத் தலை வர் வீரக்குமார் தலைமையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கிளை சார்பில் தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் ஜெயலட்சுமி பொருளாளர் முக மது ரியாஸ், செயலாளர் ராஜ்குமார்  உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை யில் பணி புறக்கணிப்பு போராட்டம்  நடைபெற்றது.

உத்தமபாளை யத்தில் மாவட்டத் தலைவர் ராம லிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.