சிவகங்கை, ஆக.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் சமீபத்தில் நேர்ந்த விபத்தில் இடது காலை இழந்த நிலை யில், அவரது உடல்நலம் குறித்து கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆறுமுகம், பேருந்து விபத்தில் ஒரு காலை இழந்தார். தற்போது அவ ருடைய சொந்த ஊரான கள்ளிப்பட்டு கிராமத்தில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தகவல் அறிந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார். திங்களன்று தோழர் ஆறுமுகத்தின் சொந்த ஊருக்கு நேரில் சென்று அவரை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரி வித்தார்.
அப்போது, மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் வி.கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வீரபாண்டி, பி. முத்துராமலிங்கபூபதி, அரு.மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு, மூத்த தோழர் சித்திரவேலு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாதவன், சின்னக் கண்ணன், காரைக்குடி தாலுகாச் செய லாளர் அழகர்சாமி, ஆட்டோ சுப்பிர மணி, விநாயகமூர்த்தி, அமானுல்லா, சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் முரு கேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சிறு விபத்துகளால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டுள்ள கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் சிறப்பாசிரியருமான மதுக்கூர் இராம லிங்கம் மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், மாதர் சங்க மாநிலச் செயலாளருமான எஸ்.கே.பொன்னுத் தாய் ஆகியோரையும் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.